மேலும் செய்திகள்
ரோட்டில் காட்டுமாடுகள் உலா வனத்துறை எச்சரிக்கை
10-Apr-2025
கெங்கவல்லி:சேலம் மாவட்டம், ஆத்துார், கெங்கவல்லி பகுதிகளில், சித்திரை, வைகாசி மாதங்களில், சில ஊர்களில் மட்டுமே நடத்தப்படும் கோவில் திருவிழாக்களில், 'முயல் வேட்டை' நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அதற்காக, பொதுமக்கள் வனப்பகுதிக்கு சென்று, முயல்களை பிடித்து வந்து திருவிழா நடத்துவர். தற்போது இப்பகுதிகளில் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. திருவிழாக்களை காரணம் காட்டி, ஆத்துார், கெங்கவல்லி பகுதிகளில், முயல் வேட்டையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'முயல் வேட்டையில் ஈடுபடும் நபர்கள் மீது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
10-Apr-2025