மேலும் செய்திகள்
அ.தி.மு.க., கூட்டத்தில் வேட்டி, சேலை வழங்கல்
10-Jul-2025
ஓமலுார், மாஜி தி.மு.க., பஞ்., தலைவி கணவர் மீது, இளைஞர்கள் தாக்கியதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்,ஓமலுார் அருகே, கோட்டை மாரியம்மன் கோவிலில் முன்னாள் பஞ்., தலைவியாக இருந்தவர் நிர்மலா. இவரது கணவர் முத்துக்குமார், 57. தி.மு.க., பிரதிநிதி. இவர் நேற்று மாலை, பச்சனம்பட்டி அருகே பூங்கா நகரில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை காண சென்றுள்ளார். அப்போது, பெரியேரிப்பட்டியைச் சேர்ந்த சிலர் முத்துக்குமாரிடம் நீங்கள் ஏன் இந்தப்பணியை செய்கிறீர்கள் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் இருதரப்புக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் முத்துக்குமாரை, எதிர்தரப்பினர் தாக்கியதில் காயமடைந்து, ஓமலுார் அரசு மருத்துவமனையில் அமதிக்கப்பட்டார்.ஓமலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10-Jul-2025