ஓடையில் தொழிற்சாலை கழிவு கிணற்று தண்ணீரில் துர்நாற்றம்
பனமரத்துப்பட்டி,ஜருகுமலையில் உற்பத்தியாகும் மழைநீர் ஓடை, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையை கடந்து, நாழிக்கல்பட்டி பாப்பான்குட்டையை சென்றடைகிறது.நேற்று, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. அதில், தெற்கத்தியான் காடு பகுதி விவசாயிகள், நாழிக்கல்பட்டி பிரிவு அருகே மழை நீர் ஓடையில் தொழிற்சாலையின் ரசாயன கழிவு விடுவதால், நிலத்தடி நீர் மாசடைந்து விட்டது. விவசாய கிணறுகளின் தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது.அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால், குடியிருக்க முடியவில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகார் மனு அளித்தனர்.