மேலும் செய்திகள்
விசாரணைக்கு ஆஜராகாதவர் கைது
24-Sep-2025
சேலம்: சேலம், அழகாபுரம் பெரியபுதுாரை சேர்ந்தவர் ராமநாதன். இவரிடம், 3 லட்சம் ரூபாயை, ஏமாற்றி மோசடி செய்த வழக்கில், ராமநாதபுரம் மாவட் டம் முதுகுளத்துாரை சேர்ந்த பூமுருகன், 41, என்பவரை அன்னதானப்பட்டி போலீசார், 2008ல் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பின் ஜாமினில் வந்தார். ஆனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால் சேலம் நீதிமன்றம், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. அன்ன1தானப்பட்டி போலீசார் தேடி வந்தனர். நேற்று அன்னதானப்பட்டியில் இருந்த பூமுருகனை, போலீசார் கைது செய்தனர்.
24-Sep-2025