உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விலையில்லா சைக்கிள் எம்.பி., வழங்கல்

விலையில்லா சைக்கிள் எம்.பி., வழங்கல்

மேட்டூர், நமேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 மாணவர்கள், 284 பேர், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், 365 பேருக்கு, தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் எம்.பி., செல்வகணபதி நேற்று, விலையில்லா சைக்கிள் வழங்கினார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: இனி மாணவர்கள், கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வருவதற்கு பஸ்சையோ, நடந்து செல்ல சக மாணவர்களையோ எதிர்பார்க்க தேவையில்லை. சைக்கிள்களில் சக மாணவர்களுடன் சேர்ந்து பள்ளிக்கு வந்து செல்லலாம்.இவ்வாறு அவர் பேசினார்.ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சேகர், சகுந்தலா, தி.மு.க., நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை