உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீ.ஜீ.விகாஸ் பப்ளிக் பள்ளியில் நீட் இலவச பயிற்சி தொடக்கம்

வீ.ஜீ.விகாஸ் பப்ளிக் பள்ளியில் நீட் இலவச பயிற்சி தொடக்கம்

பனமரத்துப்பட்டி, மல்லுார் வீ.ஜீ.விகாஸ் பப்ளிக் பள்ளியில், வீ.ஜீ., நீட் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது. கல்வியில் முதலிடம் பெற்றும், கல்வி கட்டணம் செலுத்த முடியாத அரசு பள்ளி மாணவர்களுக்கும், மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு உதவும்படி, சனி, ஞாயிறில், இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை கற்பிக்க, சின்னமுத்து, மோகன்குமார், ரமேஷ் ஆகிய பாட நிபுணர்கள், ஆலோசகர்களாக உள்ளனர். இயற்பியல் ஆசிரியர் சின்னமுத்து, 7.5 சதவீத இட ஒதுக்கீடு திட்ட பயன் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். வீ.ஜீ.விகாஸ் பப்ளிக் பள்ளியுடன் ஹெரிடேஜ் வித்யாலயா, வாகீஸ்வரி வித்யாலயா, இந்தியன் பப்ளிக், இந்தியன் மெட்ரிக் பள்ளிகளும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன. இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள, பள்ளி முதன்மை செயல் அலுவலர் திருநாவுக்கரசு அறிவுறுத்தினார். ஹெரிடேஜ் வித்யாலயா பள்ளி தலைவர் பெருமாள், பள்ளி முதல்வர் விஜயகுமார், தேர்வில் வெற்றி பெற தேவையான யுக்திகள் குறித்து விளக்கினர். பள்ளி தலைவர் பழனிசாமி, செயலர் ராமச்சந்திரன், இணை செயலர் கார்த்திகேயன், பொருளாளர் துரைசாமி, தாளாளர் செல்லமுத்து, நிர்வாக அலுவலர் வினோத்குமார், மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !