உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் விவசாயி இறப்பு ஈமச்சடங்கு நிதி வழங்கல்

விபத்தில் விவசாயி இறப்பு ஈமச்சடங்கு நிதி வழங்கல்

மேட்டூர், மேச்சேரி அடுத்த, 5வது மைல் விவசாயி பழனிசாமி, 55. கடந்த, 28 அதிகாலை, மேச்சேரி - ஓமலுார் நெடுஞ்சாலையோரம் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு பால் கொண்டு சென்றபோது, ஆம்னி வேன் மோதி பலியானார். இதனால் நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள், மேச்சேரி - ஓமலுார் சாலையில் வேகத்தடை அமைக்க, அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.இந்நிலையில் பழனிசாமி மனைவி லட்சுமி, அவரது குடும்பத்தினருக்கு ஈமச்சடங்கு நிதி, 25,000 ரூபாய்க்கான காசோலையை, ஆவின் பொதுமேலாளர் சாந்தகுமார் வழங்கினார். ஆவின் மேட்டூர் முதுநிலை ஆய்வாளர் விஜய், சங்க செயலர் கோபாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !