உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காஸ் ஆலை தொழிலாளர் போராட்டம் வாபஸ்

காஸ் ஆலை தொழிலாளர் போராட்டம் வாபஸ்

ஓமலுார், சேலம், கருப்பூரில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின்(ஐ.ஓ.சி.,), காஸ் சிலிண்டர் நிரப்பும் ஆலை உள்ளது. அங்கு, இரு ஒப்பந்த தொழிலாளர்கள் மீது ஆலை நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது. அந்த இருவருக்கு ஆதரவாக பேசியதாக, 10 தொழிலாளர்கள், பணியில் இருந்து நிறுத்தப்பட்டனர்.இதை கண்டித்தும், அனைவரையும் பணியில் சேர்க்கக்கோரியும், ஒப்பந்த தொழிலாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நடத்திய பேச்சில், பிரச்னைக்குரிய இருவரை தவிர்த்து, மற்றவர்கள் பணிக்கு திரும்ப, ஆலை நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்தனர். இதை ஏற்று, காலையில் போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் பணிக்கு சென்றனர். மேலும், வரும், 26ல் சென்னையில் நடக்க உள்ள பேச்சில், சம்பந்தப்பட்ட இரு தொழிலாளர்களின் நிலை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ