உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 5 ஆண்டுக்கு பின் அரசு பொருட்காட்சி

5 ஆண்டுக்கு பின் அரசு பொருட்காட்சி

சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் ஆடி திருவிழாவை காண வரும் பக்தர்கள், அரசு பொருட்காட்சியை கண்டுகளிப்பர். சீர்மிகு நகர திட்டத்தில், பழைய பஸ் ஸ்டாண்டில் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் கட்டி முடித்து பயன்பாட்-டுக்கு வந்தது. பின் போஸ் மைதானம் சீரமைக்கப்பட்டு, 5 ஆண்-டுகளுக்கு பின், நடப்பாண்டில் அங்கு அரசு பொருட்காட்சி நடக்-கிறது. அரசு துறை சார்பில் அரங்குகள், தனியார் ஆடை, அலங்-கார, ஆபரண பொருட்களின் கடைகள், ரங்க ராட்டினம், பஜ்ஜி உள்ளிட்ட பல்வேறு உணவு வகை கடைகள் இடம்பெறுகின்றன. இதற்கு அரங்கு, கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி ஓரிரு நாட்களில் முடிக்கப்பட்டு, ஆடித்திருவிழா வரும், 7ல் தொடங்குவதற்குள், பொருட்காட்சியை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்