அறிவியல் வினாடி - வினா அரசு பள்ளி முதலிடம்
பனமரத்துப்பட்டி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பனமரத்துப்பட்டியில், வட்டார அளவில், துளிர் அறிவியல் வினாடி - வினா போட்டி நேற்று நடந்தது. வட்டார கிளை தலைவர் தெய்வநாயகம் தலைமை வகித்தார். அதில் இளநிலை பிரிவில், நிலவாரப்பட்டி உறைவிட பள்ளி மாணவியர், ரங்காபுரம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் முறையே, முதல் இரு இடங்களை பிடித்தனர். மேல்நிலை பிரிவில் பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் முதலிடம் பிடித்தனர். இவர்கள் வரும், 13ல், மாவட்ட அளவில், சேலத்தில் நடக்கும் வினாடி - வினா போட்டியில் பங்கேற்க உள்ளனர். அறிவியல் இயக்க கிளை செயலாளர் புவனா, பொருளாளர் ஜீவிதா, ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.