உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜி பே, டெபிட் கார்டு மூலம் பயணச்சீட்டு அரசு டவுன் பஸ் கண்டக்டர்கள் புலம்பல்

ஜி பே, டெபிட் கார்டு மூலம் பயணச்சீட்டு அரசு டவுன் பஸ் கண்டக்டர்கள் புலம்பல்

பனமரத்துப்பட்டி, சேலம் மாவட்டத்தில், 16 அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து தலா, 50 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சில்லரை பிரச்னையை தவிர்க்க, டவுன் பஸ்களில், ஜி பே, டெபிட் கார்டு மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்து, பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளிடம் டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறையில் பயணச்சீட்டு வழங்கும்படி, கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து, அரசு டவுன் பஸ் கண்டக்டர்கள் கூறியதாவது:டவுன் பஸ்களில் கூட்டம் அதிகம் இருக்கும். ஒருவருக்கு டிஜிட்டல் முறையில் பயணச்சீட்டு வழங்க குறிப்பிட்ட நேரமாகும். அனைவருக்கும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம், பயணச்சீட்டு வழங்குவதற்குள், இறங்க வேண்டிய நிறுத்தம் வந்துவிடும். சில நேரங்களில் நெட்வெர்க் பிசியாக இருப்பதால், பரிவர்த்தனை நடப்பதில்லை. இதனால், இறங்க வேண்டிய நிறுத்தம் வரையில் பயணச்சீட்டு கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அங்கு வரும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு என்ன பதில் சொல்வது.தொலைதுார பஸ்களில் டிஜிட்டல் முறையில் பயணச்சீட்டு வழங்கலாம். குறுகிய நிறுத்தம் உள்ள டவுன் பஸ்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு வழங்கும் நடைமுறை சரி வராது. டிஜிட்டல் முறையில் பயணச்சீட்டு வழங்க வேண்டும். இல்லையெஎன்றால், மேல் அதிகாரியை போய் பாருங்கள் என, அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதால், கண்டக்டர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை