பள்ளத்தில் இறந்து கிடந்த பட்டதாரி
மேட்டூர், :மேட்டூர், பி.என்.பட்டி., ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் பழனிசாமி, 54. வக்கீலுக்கு படித்துள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரி, 45. கூலித்தொழிலாளி. இவர்களுக்கு, மகள், மகன் உள்ளனர். பழனிசாமிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வெளியே சென்ற அவர், வீடு திரும்பவில்லை. ராஜேஸ்வரி கணவரை தேடியபோது, சாம்பள்ளி ரயில்வே கேட் அருகே, 5 அடி பள்ளத்தில் தலையில் காயத்துடன் பழனிசாமி இறந்து கிடந்தார். தொடர்ந்து அவர் புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.