உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கன்டெய்னர் லாரி டயரில் சிக்கி காவலாளி பலி; டீ மாஸ்டர் படுகாயம்

கன்டெய்னர் லாரி டயரில் சிக்கி காவலாளி பலி; டீ மாஸ்டர் படுகாயம்

ஓமலுார், காடையாம்பட்டி, கஞ்ச நாயக்கன்பட்டி, பாப்பிசெட்டிப்பட்டி காலனியை சேர்ந்தவர் சீனிவாசன், 38. டீ மாஸ்டர். நடுப்பட்டியை சேர்ந்தவர் வேலு, 34. காவலாளியாக பணிபுரிந்தார். இருவரும் நேற்று மாலை முத்துநாயக்கன்பட்டி சென்றுவிட்டு, 'ஹீரோ ஹோண்டா' பைக்கில் கஞ்சநாயக்கன்பட்டி புறப்பட்டனர். ஹெல்மெட் அணியாமல், சீனிவாசன் ஓட்டினார். 5:30 மணிக்கு, முத்துநாயக்கன்பட்டி - பெரமெச்சூர் சாலையில் சென்றபோது, கூரியர் கன்டெய்னர் லாரியை முந்த முயன்றார். அப்போது நிலை தடுமாறியதில், வேலு விழுந்து, கன்டெய்னர் லாரி டயரில் சிக்கி சம்பவ இடத்தில் தலை நசுங்கி உயிரிழந்தார். சீனிவாசனும் விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு, ஓமலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர். ------------------தொழிலாளி சாவுஅயோத்தியாப்பட்டணம் அருகே பாலப்பட்டியை சேர்ந்த, கூலித்தொழிலாளி தமிழ்கண்ணன், 37. இவர், நண்பர் சக்திவேலுடன், கடந்த, 19ல் கூட்டாத்துப்பட்டியில் இருந்து அயோத்தியாப்பட்டணம் நோக்கி, 'யமஹா ஆர்.எக்ஸ்.,' பைக்கில் சென்று கொண்டிருந்தார். சக்தி வேல் ஓட்டினார்.செல்லியம்பாளையம் பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிரே, 'டி.வி.எஸ்.,' மொபட்டில் நின்று கொண்டிருந்த முதியவர் மீது பைக் மோதியது. இதில் தமிழ்கண்ணன் தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி