வாலிபரிடம் வழிப்பறி: இரு ரவுடிக்கு காப்பு
சேலம்:சேலம், சூரமங்கலம் அருகே முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் கணேஷ், 26. இவர், தீபாவளி பண்டிகைக்காக, நேற்று காலை பொருட்கள் வாங்க பழைய பஸ் ஸ்டாண்ட், நேரு கலையரங்கம் பகுதியில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, அவரை வழிமறித்த இருவர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து, 6,030 ரூபாயை வழிப்பறி செய்து தப்பினர். பாதிக்கப்பட்ட அவர், சேலம் டவுன் போலீசில் புகார் அளித்தார். வழக்குபதிந்து, தீவிர விசாரணைக்கு பின், ரவுடிகளான சேலம், கோட்டையை சேர்ந்த உமர், 40, தாதகாப்பட்டியை சேர்ந்த சதிஷ், 41, ஆகிய இருவரை கைது செய்தனர்.