உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காடையாம்பட்டி அருகே மாற்றுத்திறனாளிகள் மறியல்

காடையாம்பட்டி அருகே மாற்றுத்திறனாளிகள் மறியல்

காடையாம்பட்டி: காடையாம்பட்டி தாலுகா சின்னத்திருப்பதியில், துணை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, மரக்கோட்டை கிராமத்துக்குரிய, அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதில், 2 சென்ட் நிலத்தில் அப்பகு-தியை சேர்ந்த மாற்றுதிறனாளிகள் ஆக்கிரமித்து, வணிக வளாக-மாக மூன்று கடைகளை கட்டியுள்ளனர். இப்பணி நடந்து கொண்-டிருந்த போதே, வருவாயத்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்-கிரமிப்பு செய்யக்கூடாது என, வருவாய் துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.உத்தரவை மீறி, கடைகள் கட்டி முடிக்கப்பட்டு, ஒரு டெய்லர் கடை திறக்கப்பட்டது. நேற்று வருவாயத்துறை சார்பில் ஆக்ரமிப்-புதாரர்களை அகற்ற சென்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்-றுத்திறனாளிகள், கஞ்சநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் நடுவே சேர்களை போட்டு, அதில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.இது குறித்து அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடைகளை கட்டியதாக கூறப்படும், காருவள்ளி பகுதியை சேர்ந்த சூர்யசேகர் கூறியதா-வது: 17 மாற்றுத்திறனாளிகள் சேர்ந்து கடைகள் அமைத்து அதில் ஊதுவர்த்தி, மெழுகுவர்த்தி தயாரித்து விற்பனை செய்ய இடம் கேட்டு, எம்.பி., மற்றும் தாசில்தாரிடம் மனு வழங்கினோம். யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த இடம் காலியாக இருந்-ததால், பலரின் உதவியால் கடைகளை கட்டியுள்ளோம். இந்த சர்வே நம்பரில், 30 பயனாளிகள் ஆக்கிரமித்து உள்ளனர். அவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள், தார்சு வீடுகளை கட்டியுள்ளனர். அதன் மூலம் வாடகை வருவாய் பெற்று வருகின்-றனர். அவர்களை விட்டு விட்டு, மாற்றுதிறனாளிகளான நாங்கள் கட்டிய கடைகளை மட்டும் அகற்ற வருவாயத்துறையினர் நடவ-டிக்கை எடுக்கின்றனர். இது குறித்து, ஓமலுார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். ஆனால் வருவாய்த்துறை எங்கள் கடையை இடிக்க பொக்லைன் இயந்திரத்துடன் வந்துள்ளனர். இவ்வாறு கூறினார்.தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் காடையாம்பட்டி தாசில்தார் விமல்பிரகாஷ் ஆகியோர் மாற்றுதிறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி எழுதி வாங்கிக் கொண்டனர். அதன் பின் மதியம், 3:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்-றனர்.இது குறித்த தாசில்தார் விமல் பிரகாஷ் கூறுகையில்,'' போராட்-டத்தில் ஈடுபட்டவர்களிடம், ஆக்கிரமிப்பு கட்டடத்தில் அத்துமீ-றினால் நாங்கள் 'சீல்' வைத்து விடுவோம், நீதிமன்ற உத்தரவு வரும் வரை, யாரும் கடையை பயன்படுத்த கூடாது, நாங்களும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என, எழுதி வாங்கிக் கொண்டோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி