உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 70 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஏரியால் மகிழ்ச்சி

70 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஏரியால் மகிழ்ச்சி

இடைப்பாடி, மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தில், கொங்கணாபுரம் அருகே கச்சுப்பள்ளி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கடந்த வாரம் தண்ணீர் வரத்தொடங்கியது. இதனால் நேற்று இரவு, 70 ஆண்டுக்கு பின் இந்த ஏரி நிரம்பியது.கொங்கணாபுரம் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் மணி, காவிரி உபரிநீர் மீட்பு குழு தலைவர் வேலன் தலைமையில் ஏராளமான விவசாயி கள், ஏரியில் இருந்து நிரம்பி வழிந்த தண்ணீர் மீது பூக்கள் துாவி மகிழ்ந்தனர். இந்த ஏரியால், 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ