மேலும் செய்திகள்
சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய படகு இல்லம்
28-Oct-2024
ஏற்காடு : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகளால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சுற்றுலா தலமாக உள்ளது. சேலம் மாவட்டம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நேற்று ஏற்காடு வந்தனர். பெரும்பாலானோர் கார்கள், இரு சக்கர வாகனங்களில் மலைப்பாதையில் தொடர்ந்து சென்றபடி இருந்தனர். இதனால் மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.இவர்கள் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா, லேடி சீட், ஜென்ஸ் சீட், சில்ரன்ஸ் சீட், பகோடா பாயின்ட், கரடியூர் காட்சி முனை ஆகிய இடங்களை கண்டு ரசித்தனர். படகு இல்லம் வந்த சுற்றுலா பயணிகள், பயண சீட்டு வாங்கி ஒரு மணி நேரம் காத்திருந்து, படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், சூழல் சுற்றுலா பூங்கா சென்ற அவர்கள் அங்குள்ள சாகச விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள், தங்கள் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு சென்றதால், ஒண்டிக்கடை ரவுண்டானா, அண்ணா பூங்கா சாலை, படகு இல்ல சாலை, லேடி சீட் சாலை, பக்கோடா பாயின்ட் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
28-Oct-2024