உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

வாழப்பாடி, வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து, மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முதல் ஆத்துமேடு பாலம் வரை, தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் இருபுறமும், ஆக்கிரமித்துள்ள கடைகள் மற்றும் மேற்கூரையை அகற்றக்கோரி, வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கடந்த இரு வாரத்திற்கு முன், 120 கடை உரிமையாளர்களிடம் நோட்டீஸ் வழங்கினர். இல்லையெனில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவித்தனர்.இதை தொடர்ந்து, தம்மம்பட்டி நெடுஞ்சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை ஆக்கிரமிப்புகளை, கடை உரிமையாளர்கள் தானாக முன்வந்து சிலர் அகற்றி கொண்டனர். மேலும், அகற்றப்படாமல் உள்ள ஆக்கிரமிப்புகளை, நாளை நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணியாளர்கள் மூலம் அகற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை