தரைப்பாலம் மூழ்கியதால் கவனம்: நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை
தலைவாசல்: தரைப்பாலம் மூழ்கியதால், கவனமாக செல்ல அறிவுறுத்தி, நெடுஞ்சாலைத்துறையினர், எச்ச-ரிக்கை பேனர் வைத்துள்ளனர்.தலைவாசல் அருகே ஆறகளூர், டாஸ்மாக் கடை அருகே, ஆறகளூர் - சித்தேரி, புளியங்குறிச்சி சாலை குறுக்கே ஓடை செல்கிறது. அதில் ஆற-களூர், தியாகனுார் ஏரிகளில் இருந்து, சித்தே-ரியில் உள்ள ஏரி, வசிஷ்ட நதிக்கு தண்ணீர் செல்-கிறது.நேற்று அதிகாலை முதல் பெய்த மழையால், ஆறகளூரில் தரைப்பாலம் மூழ்கி-யது. பாலம் தெரியாதபடி தண்ணீர் செல்லும் நிலையில், அந்த வழியே பஸ், கார், வேன், பைக், மொபட்டுகளில், ஆபத்தான நிலையில் மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆத்துார் கோட்ட நெடுஞ்சாலைத்துறையினர், 'பாலம் மேல் தண்ணீர் செல்வதால் கவனமாக செல்லவும்' என, பாலத்தின் இருபுறமும் பேனர் வைத்துள்ளனர்.உயர்மட்ட பாலம்
இதுகுறித்து மக்கள் கூறுகை யில், 'தரைப்பாலம் மூழ்கிய நிலையில், மழை அதிகரித்தால், சித்-தேரி, ஆறகளூர், கோவிந்தம்பாளையம், புளியங்-குறிச்சி உள்பட, 10க்கும் மேற்பட்ட கிராமங்க-ளுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். தவிர ஆறகளூர் வழியே செல்லும் ஆத்துார் - கோவிந்தம்பாளையம், புளியங்குறிச்சிக்கு, அரசு, தனியார் பஸ்கள் இயக்க முடியாத நிலையும் உருவாகும். அதனால் உயர்மட்ட மேம்-பாலமாக கட்ட, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்-றனர்.சந்தையில் அவதி
நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் எதிரே, நர-சிங்கபுரம் - தளவாய்பட்டி சாலை செல்கிறது. நேற்றைய மழையால், அச்சாலையில், வியாழன் சந்தை பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி-யது. வியாபாரிகள், காய்கறி விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட்டனர். தவிர மக்களும் சந்-தைக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அங்கு மழைநீர் தேங்காதபடி வடிகால் அமைத்து, கான்-கிரீட் தளம் அமைக்கவும், சாலையை சீரமைக்-கவும், வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.வியாபாரம் பாதிப்பு
அதேபோல் வாழப்பாடி வாரச்சந்தை கூடியது. அதற்கு சந்தைப்பேட்டை, சேலம் - -தம்மம்பட்டி நெடுஞ்சாலையில், ஏராளமான கடைகளை அமைத்து பழங்கள், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில் வியாபாரிகள் ஈடுபட்-டனர். இந்நிலையில் மழை பெய்தபடி இருந்-ததால், வழக்கமான மக்கள் கூட்டமின்றி வியா-பாரம் பாதிக்கப்பட்டதால், வியாபாரிகள் கவலை அடைந்தனர்.பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து
கெங்கவல்லி அருகே கோனேரிப்பட்டி வழியே சுவேத நதி செல்கிறது. அதன் வடக்கு கரையில் லுார்து நகர், கொண்டையம்பள்ளி வடக்கு, நாகியம்பட்டி கிழக்கு, காட்டுக்கொட்டாய் பகுதிகள் உள்ளன. அங்கு, 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்-ளன. அப்பகுதி மக்கள், சுவேத நதியை கடந்து தான், தம்மம்பட்டி சென்று வருகின்றனர். நேற்று மழையால் சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்-பட்ட நிலையில், காலை, 8:00 மணிக்கு, 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், சுற்றி செல்வதை தவிர்க்க, ஆற்றிலேயே ஆபத்தான முறையில் கடந்து, பள்ளிக்கு செல்ல முயன்றனர். ஆற்றில் இறங்கி பாதி துாரம் வந்தபோது, மறுகரையில் இருந்தவர்கள், பள்ளி விடுமுறை குறித்து தகவல் தெரிவித்ததால், மாணவர்கள் திரும்பிச்சென்-றனர். இதுகுறித்து கோனேரிப்பட்டி மக்கள் கூறு-கையில், 'கோனேரிப்பட்டி சுவேத நதி வடக்கு பகுதியில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் உள்ளன. ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டி-யுள்ளது. அதிகளவில் மழை பெய்து வெள்ளப்பெ-ருக்கு ஏற்பட்டால் ஆற்றை கடக்க முடியாத சூழல் உருவாகிறது. பள்ளி மாணவர்கள், தினமும் ஆற்றில் இறங்கி கடந்து செல்கின்றனர். இங்கு பாலம் அமைத்து தரும்படி, கலெக்டர் உள்ளிட்ட அனைத்து துறையினரிடமும் மனு அளித்தும் நட-வடிக்கை இல்லை. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.