உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீட்டை திறந்து கைவரிசை வெள்ளி, புடவை திருட்டு

வீட்டை திறந்து கைவரிசை வெள்ளி, புடவை திருட்டு

சேலம், சேலம் குகை பகுதியை சேர்ந்த ராஜா மனைவி ஷீலா, 35. முதல் தளத்தில் குடியிருக்கும் இவர், கடந்த 19ம் தேதி மாலை, 5:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, சாவியை, தரைதள வீட்டு ஜன்னல் பகுதியில் வைத்துவிட்டு, கடைக்கு சென்றுவிட்டார். பின்னர் வந்து பார்த்த போது, வீடு, பீரோவை திறந்து, பீரோவின் ரகசிய அறையில் வைத்திருந்த 2 கிராம் தோடு, 4 ஜோடி வெள்ளி கொலுசு, இரு பித்தளை குத்துவிளக்கு, பித்தளை படி, 5 டம்ளர், 25 புடவை, 5,000 ரூபாய் ஆகியன திருட்டுபோனது தெரிந்தது. அவரது புகார்படி, செவ்வாய்பேட்டை போலீசார், அப்பகுதி சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுபோன பொருட்களின் மதிப்பு, 1 லட்ச ரூபாய் இருக்கும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை