ஹூப்ளி-ராமேஸ்வரம் ரயில் 6 மாதம் நீட்டிப்பு
சேலம்: ஹூப்ளி-ராமேஸ்வரம் சிறப்பு ரயில், ஜூன், 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஹூப்ளி-ராமேஸ்வரம் சிறப்பு வார ரயில், சனிக்கிழமைகளில் காலை, 6:50 மணிக்கு கிளம்பி, ஒசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் வழியே அடுத்த நாள் காலை, 6:15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். இந்த ரயில், ஜன., 4 முதல், ஜூன், 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம்-ஹூப்ளி சிறப்பு வார ரயில், ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு, 9:00 மணிக்கு கிளம்பி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர் வழியே அடுத்த நாள் இரவு 7:40 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். இந்த ரயில் ஜன., 5 முதல், ஜூன், 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.