உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

தாரமங்கலம் :தாரமங்கலம், தொளசம்பட்டி பிரிவு பொன்பழனி நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 46, கார் ஓட்டுனர். இவரது மனைவி கவிதா, 36, தனியார் பள்ளி ஆசிரியர். வெங்கடேஷ் கடந்த, 10ல் சேலத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறி, வீட்டில் இருந்து பைக்கில் சென்றார். இரவு 9:00 மணியாகியும் வீட்டிற்கு வராததால் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. கணவரை கண்டுபிடித்து தரக்கோரி கவிதா கொடுத்த புகார்படி, தாரமங்கலம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து காணாமல் போன வெங்கடேஷை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை