உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தனி குடித்தனத்திற்கு மறுப்பு தற்கொலைக்கு துாண்டியதாக கணவர் சிறையில் அடைப்பு

தனி குடித்தனத்திற்கு மறுப்பு தற்கொலைக்கு துாண்டியதாக கணவர் சிறையில் அடைப்பு

தலைவாசல் : கர்ப்பிணி மனைவி தற்கொலை செய்து கொண்டதால், தனி குடித்தனம் வர மறுத்த கணவர், தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், தலைவாசல், மணிவிழுந் தான் ஊராட்சி, மணிவிழுந்தான் வடக்குபுதுாரை சேர்ந்தவர் சீனிவாசன், 26; தனியார் நிதி நிறுவன ஊழியர். அதே பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனா, 23. இவர்களுக்கு மார்ச், 3ல் திருமண மானது. இரண்டு மாத கர்ப்பமாக இருந்த கீர்த்தனா, கணவரை தனிக்குடித்தனம் செல்ல அழைத்தார். கணவரோ, 'தனிக்குடித்தனம் வேண்டாம்' எனக்கூற தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கீர்த்தனா, ஜூன், 3ல் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.கீர்த்தனாவின் தந்தை செல்லப்பன், தலைவாசல் போலீசில் புகாரளித்தார். மணமான, 3 மாதங்களில் கர்ப்பிணி தற்கொலையால், தலைவாசல் போலீசார் பரிந்துரைப்படி, ஆத்துார் ஆர்.டி .ஓ., பிரியதர்ஷினி விசாரித்தார். தொடர்ந்து, தற்கொலைக்கு துாண்டியதாக, நேற்று முன்தினம் சீனிவாசனை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை