நிதி மோசடி, சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் புகார் அளிக்கலாம்
சேலம்: இணையதளம் மூலம், பணம் இரட்டிப்பு தொடர்பான மோச-டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் தரப்பில் அறிவு-றுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கூறியதா-வது: முதலீடு மோசடி, போலி விளம்பரம், ஓ.டி.பி., பார்சல், கல்வி உதவித்தொகை, கே.ஒய்.சி., புதுப்பிப்பு, போலி கஸ்டமர் கேர், ஆன்லைன் வேலைவாய்ப்பு, கிரடிட் கார்டு, மொபைல் விளையாட்டுகளின் பாதிப்பு, கடன் செயலி உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். எந்த நிதி மோசடிகளால் அல்லது சைபர் குற்றங்களால் பாதிக்கப்-பட்டால், உடனே சைபர் கிரைம் உதவி எண்: 1930 அல்லது www.cybercrime.gov.inஎன்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.