உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தனிப்பட்டா கிடைக்கல மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

தனிப்பட்டா கிடைக்கல மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

சேலம்: சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் பேரூராட்சி, பேட்டை தெருவை சேர்ந்த சுப்ரமணி மனைவி ஜெயமணி, 67. இவர் மனு கொடுக்க நேற்று, கலெக்டர் அலுவலகம் வந்தவர், திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து மீட்டு, முதலுதவி அளித்தனர். அதன்பின், அவரது மகன் இளவரசன், 37, கூறியதாவது: என் பெயரில், 33 சென்ட் நிலம் உள்ளது. அதற்கு தனிப்பட்டா கேட்டு, பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவில் விண்ணப்பித்து ஓராண்டாகியும் நடவடிக்கை இல்லை. அது தொடர்பான வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்து-றையினர், எனது நிலத்தை கையகப்படுத்துவதாக கூறி, நிலத்-துக்கு போடப்பட்ட வேலியை அகற்றி, சேதப்படுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட எங்களுக்கு நியாயம் கேட்டு, தாய் தீக்குளிக்க முயன்றுள்ளார்.இவ்வாறு கூறினார்.இது தொடர்பாக சேலம் டவுன் போலீசார் தாய், மகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை