மேலும் செய்திகள்
நுாலகம் திறப்பு விழா
11-Sep-2024
ஓமலுார்: சேலம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், ஓமலுார் சட்டசபை தொகுதியில், இளைஞரணி சார்பில் கலைஞர் நுாலகம் திறப்பு விழா டவுன் பஞ்.,அலுவலகம் அருகே நடந்தது.ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில், சேலம் எம்.பி., செல்வக-ணபதி ரிப்பன் வெட்டி நுாலகத்தை திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர் ரஜேந்திரன் பேசுகையில்,''புதிதாக அமைக்கப்பட்ட கலைஞர் நுாலகம் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி வளத்தை வளர்த்து கொள்ள பயனுள்ளதாக அமையும்,'' என்றார்.மாநில இளைஞரணி துணை செயலர் சீனிவாசன், இளைஞ-ரணி மாவட்ட அமைப்பாளர் அருண்பிரசன்னா, சேலம் மேயர் ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் சண்முகம், அழகிரி, மாவட்ட சுற்றுசூழல் அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் ராம்பிரகாஷ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் நாகராஜ், ஓமலுார் தெற்கு ஒன்றிய செயலர் செல்வ-குமரன், காடையாம்பட்டி ஒன்றிய செயலர்கள் அறிவழகன், ரவிச்-சந்திரன், தளபதி நற்பணி மன்றம் தலைவர் மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
11-Sep-2024