மேலும் செய்திகள்
பிரதமர் பிறந்தநாள்: மினி மாரத்தான் போட்டி
29-Sep-2025
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 13வது வார்டு சத்திய நாராயணபுரத்தில், 9.50 லட்சம் ரூபாயில் மழைநீர் வடிகால்; 12வது வார்டில், 10 லட்சம் ரூபாயில் மழைநீர் வடிகால்; 2வது வார்டில் ஆழ்துளை குழாய் கிணறு அமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ள, 15வது நிதி குழு மானியத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டப்பணி தொடக்க விழா, அந்தந்த வார்டுகளில் நேற்று நடந்தது. 9வது வார்டு கவுன்சிலர் ரவிக்குமார் தலைமை வகித்தார். தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், பணிகளை தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் ஜனார்த்தனன், டவுன் பஞ்சாயத்து தலைவி பரமேஸ்வரி, துணைத்தலைவர் பிரபுகண்ணன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
29-Sep-2025