மேலும் செய்திகள்
மேட்டூர் அணை நீர்வரத்து உயர்வு
02-Oct-2024
மேட்டூர் : மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில், 45,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஆக., 1 முதல் டிச., 15 வரை, அதிகபட்சம் வினாடிக்கு, 1,000 கனஅடி வீதம், கால்வாயில், 9.5 டி.எம்.சி., நீர் திறக்கப்படும்.நடப்பாண்டு முன்னதாக கடந்த ஜூலை, 30ல், பாசனத்துக்கு முதல்கட்டமாக வினாடிக்கு, 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின் ஆக., 24ல் நீர்திறப்பு வினாடிக்கு, 700கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரிக்க நேற்று காலை, 8:00 மணி முதல், வினாடிக்கு, 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.நீர்வரத்து சரிவுமேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த ஜூலை, 30ல் அணை நிரம்பிய நிலையில் டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 15,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த, 31ல் வினாடிக்கு, 3,284 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த மழையால் நேற்று முன்தினம், 12,763 கனஅடியாக அதிகரித்தது. பின் மழை தீவிரம் குறைந்து வெயில் அதிகரிக்க, நேற்று நீர்வரத்து வினாடிக்கு, 10,831 கனஅடியாக சற்று குறைந்தது. நேற்று முன்தினம், 95.08 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று, 94.72 அடியாக சரிந்தது.
02-Oct-2024