உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆக்கிரமிப்பை அகற்ற தனி நபர் தர்ணா

ஆக்கிரமிப்பை அகற்ற தனி நபர் தர்ணா

ஆத்துார்,சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி விநாயகபுரத்தில், ஆதிதிராவிட சமுதாயத்தினருக்கு மயானம் உள்ளது.அதன், 3 புறமும் சிலர் ஆக்கிரமித்துள்ளது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக கூறி, தில்லை நகரை சேர்ந்த இளையராஜா, 47, என்பவர், நேற்று ஆத்துார் தாலுகா அலுவலகம் முன் பதாகையுடன் தர்ணாவில் ஈடுபட்டார். வருவாய்த்துறையினர், அவருடன் பேச்சு நடத்தியும் பலனில்லை.இதனால் ஆத்துார் டவுன் போலீசார் வந்து, 'துறை அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தவர். பின் அவர், தர்ணாவை கைவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ