மேலும் செய்திகள்
கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை
10-Nov-2024
குடிநீர் தொட்டி பணியை துவக்கிவைத்த எம்.எல்.ஏ.,ஆத்துார், டிச. 8-கொத்தாம்பாடி ஊராட்சி புதுகொத்தாம்பாடியில், கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு, ஆத்துார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதேபோல் அப்பமசமுத்திரத்தில், 60,000 லிட்டர் மேல்நிலை தொட்டி கட்ட, ஆத்துார் எம்.எல்.ஏ., நிதியில், 18 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. இதில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் தொகுதி, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், இரு பணிகளையும் தொடங்கிவைத்தார். இதில் ஆத்துார் மேற்கு ஒன்றிய செயலர் ரஞ்சித்குமார், ஒன்றிய கவுன்சிலர் பன்னீர்செல்வம், ஊராட்சி தலைவர்கள், பா.ம.க., - தே.மு.தி.க.,வினர் உள்பட பலர் பங்கேற்றனர்.ரேஷன் கடை ஆத்துார் அருகே பைத்துார் ஊராட்சி, பாய்கடை பஸ் ஸ்டாப் பகுதியில், ரேஷன் கடை கட்ட, தேசிய ஊரக வேலை திட்டத்தில், 13.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் ஒன்றிய குழு தலைவி பத்மினிபிரியதர்ஷினி தலைமை வகித்து பணியை தொடங்கிவைத்தார்.முன்னாள் கவுன்சிலர் ரவி, ஊரக வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
10-Nov-2024