மேலும் செய்திகள்
மது விற்றவர் கைது 120 பாட்டில் பறிமுதல்
29-May-2025
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, தாசநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சேதம் அடைந்த பழைய வகுப்பறை கட்டடம், கடந்த ஆண்டு இடித்து அகற்றப்பட்டது. அப்போது மேற்கு பகுதியில் இருந்த சுற்றுச்சுவரும் இடித்து தள்ளப்பட்டது. மீண்டும் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. பள்ளி முன்புற நுழைவாயில் கேட் பூட்டப்படுகிறது. ஆனால் பின்புறத்தில் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்து கிடக்கிறது. இதனால் விடுமுறை நாட்கள், இரவு நேரங்களில், பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழையும் வாலிபர்கள், மது அருந்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் கணினி உள்ளிட்ட பொருட்கள் திருடுபோகும் ஆபத்து உள்ளதால், சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.
29-May-2025