ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வழங்க வலியுறுத்தல்
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, சின்னையாபுரத்தில், ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை குழாய் கிணறு உள்ளது. ஆனால் பழுதானதால், மோட்டார், பைப்பை கழற்றி எடுத்துச்சென்றனர். ஓராண்டுக்கு மேலாகியும் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்து வினியோகிக்க நடவடிக்கை இல்லை. தற்போது குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆழ்துளை கிணறும் பயன்பாடின்றி சீரழியும் நிலை உள்ளதால் அதிலிருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்க, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.