உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அழுகிய நிலையில் மீட்ட பெண் சடலம் துாய்மை பணியாளரா என விசாரணை

அழுகிய நிலையில் மீட்ட பெண் சடலம் துாய்மை பணியாளரா என விசாரணை

சங்ககிரி, சங்ககிரி, அக்கமாபேட்டை அருகே, பாலத்தின் அடியில் முகம் சிதைந்து, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில், 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை, சங்ககிரி போலீசார் நேற்று முன்தினம் கைப்பற்றினர். தொடர்ந்து, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. இதுகுறித்து சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் நேற்று, சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். தனிப்படை போலீசார், பல்வேறு பகுதிகளில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.இந்நிலையில் சங்ககிரி நகராட்சி துாய்மை பணியாளரான, அக்கமாபேட்டையை சேர்ந்த ஒரு பெண், 4 நாட்களாக பணிக்கு வராததும், அவர் வீட்டில் இல்லாததும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து, அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் இதுதொடர்பாக, சங்ககிரி நகராட்சியில் துாய்மை பணியாளராக இருந்து நீக்கப்பட்ட, ஆண் ஒருவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ