புது ரக நிலக்கடலை விதை மானியத்தில் பெற அழைப்பு
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், ஆண்டுதோறும் வைகாசி பட்டத்தில், 500 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது புது ரகமான வி.ஆர்.ஐ., - 10 நிலக்கடலை விதை மானியத்தில் வழங்கப்படுகிறது. இது முளைப்பு திறன், எண்ணெய் பசை தன்மை அதிகம் கொண்டவை. விதைத்த, 115 நாளில் அறுவடை செய்யலாம். மானியத்தில் வழங்கப்படும் விதை மற்றும் ஜிப்சம் ஆகியவற்றை பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என, அதன் உதவி இயக்குனர் சாகுல் அமீத் தெரிவித்துள்ளார்.