உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் குளித்த ஐ.டி., ஊழியர் சாவு

கிணற்றில் குளித்த ஐ.டி., ஊழியர் சாவு

சேலம்:சேலம் கருப்பூர், நாச்சியப்பா தெருவை சேர்ந்த கண்ணன் மகன் அருண், 27. பி.இ., முடித்துவிட்டு பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தார். இரு நாட்களுக்கு முன் விடுமுறையில் வந்த அருண் நேற்று கருப்பூர் அருகே தனியார் பள்ளி பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் நீச்சலடித்து குளித்தார். பின் மேலே ஏறி வரும்போது நிலை தடுமாறி கிணற்றில் விழுந்தவர் மூழ்கிவிட்டார். சக நண்பர்கள் தகவல்படி, சூரமங்கலம் தீயணைப்பு வீரர்கள், கருப்பூர் போலீசார், ஒரு மணி நேரத்துக்கு பின் அருணை சடலமாக மீட்டனர். அப்போது அவரது தலையில் காயம் ஏற்பட்டிருந்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை