மேலும் செய்திகள்
பனமரத்துப்பட்டி பிரிவில் பஸ் பயணியர் அவதி
22-Sep-2024
பனமரத்துப்பட்டியில்இரு நாட்களாககொட்டிய மழைபனமரத்துப்பட்டி, அக். 12-பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், இரண்டு நாட்களாக மழை கன மழை கொட்டியது.பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் வேளாண், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்சமயம், தினசரி மழை பொழிந்து வருவதால், விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது.நேற்று முன்தினம் மதியம், 2:30 மணி முதல் கம்மாளப்பட்டி, தும்பல்பட்டி, திப்பம்பட்டி, குரால்நத்தம், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டியது. வயல், வரப்பு நிரம்பி மழை நீர் ஓடியது. மாலை, 4:30 மணிக்கு மழை ஓய்ந்தது. மீண்டும் இரவு, 8:30 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. தொடர் மழையால் நெல் பயிரிடும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் பனமரத்துப்பட்டியில் கனமழை பெய்தது. தொடர்ந்து மாலை வரை விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.
22-Sep-2024