உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தமிழகத்தில் தான் இளைஞர்கள் அதிக அளவில் படித்துள்ள

தமிழகத்தில் தான் இளைஞர்கள் அதிக அளவில் படித்துள்ள

'தமிழகத்தில் தான் இளைஞர்கள் அதிக அளவில் படித்துள்ளனர்'ஆத்துார், : சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கல்பகனுார், துலுக்கனுார், அரசநத்தம் கிராமங்களில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பேசியதாவது:கிராமப்புற மாணவர்கள், உயர்கல்வி படிக்க வேண்டும். இந்திய அளவில், தமிழகத்தில் தான் இளைஞர்கள் அதிகளவில் படித்துள்ளனர். அரசு பள்ளிக்கு முதல்வர் ஸ்டாலின் ஆய்வுக்கு சென்றபோது, சோர்வாக இருந்தவர்களை பார்த்து தான், காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தை, கனடா நாட்டின் பிரதமர் பாராட்டியுள்ளார். சேலம் மாவட்டத்தில், 3ம் கட்டமாக, மக்களுடன் முதல்வர் திட்டத்தில், 90 முகாம்கள் நடத்தப்படுகின்றன. நேற்றைய முகாமில், 1,463 மனுக்கள் பெற்று, 420க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, 356 பேருக்கு, 28.70 லட்சம் ரூபாயில் வேளாண், சமூக நலம், மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், சேலம் டி.ஆர்.ஓ., ரவிக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிவலிங்கம், சின்னதுரை, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் சுரேஷ்குமார், வேளாண் இணை இயக்குனர் சிங்காரம், ஆத்துார் தாசில்தார் பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ