மேலும் செய்திகள்
நாழிக்கல்பட்டியில் 2 ஏரிகள் நிரம்பின
04-Dec-2024
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வழியே ஜருகும-லையில் இருந்து துர்கை அம்மன் கோவில் ஏரிக்கு, மழைநீர் ஓடை செல்கிறது. சமீபத்தில் பெய்த மழையால் ஓடையில் மண் திட்டு ஏற்பட்டு, தண்ணீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். ஓடையில் சாக்கடை கழிவு, சகதி, குப்பை, பிளாஸ்டிக் கழிவு நிறைந்திருந்தன. நேற்று, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி அரசு பள்ளி அருகே, குடியிருப்பு பகுதியில் மழைநீர் ஓடையில் கழிவு துார்-வாரும் பணி தொடங்கியது.இதுகுறித்து ஊராட்சி தலைவர் வெங்கடாசலம் கூறுகையில், ''ஓடையை துார்வார ஊராட்சியில் ரசீது போட முடியாது என, அதிகாரிகள் தெரிவித்தனர். துர்கை அம்மன் கோவில் ஏரி நிரம்பி, ஓடையில் தண்ணீர் தேங்கியுள்ளது. அடுத்து மழை வந்தால் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்து விடும். அதனால் சொந்த செலவில் வாகனம் வைத்து ஓடையை துார்வாரி, ஆழப்படுத்தி வருகிறேன்,'' என்றார்.
04-Dec-2024