குளிரால் ஜெர்கின் விற்பனை ஜோர்
ஏற்காடு:ஏற்காட்டில் சமீபத்தில் இரு நாட்கள் தொடர்ந்து கனமழை பெய்தது. தொடர்ந்து அப்பகுதியில் கடுங்குளிர் நிலவியது. குறிப்பாக கடந்த இரு நாட்களாக, மாலை, 4:00 மணிக்கு மேல் வழக்கத்தை விட குளிர் அதிகமாக நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணியர் குளிரை தாங்க முடியாமல் தவிக்கின்றனர். பலர், ஸ்வெட்டர், ஜெர்கின் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து சுற்றிப்பார்க்கின்றனர். இதன் எதிரொலியாக, ஏற்காட்டில் உள்ள ஜவுளி கடைகள் மட்டுமின்றி சாலையோர ஸ்வெட்டர், ஜெர்கின் கடைகளில் நேற்று விற்பனை அமோகமாக நடந்தது. சுற்றுலா பயணியர் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும், ஜெர்கின் வாங்கினர்.