ஒரே நாளில் நிரம்பிய கரியகோயில் அணை
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், கல்வராயன்மலையில் இருந்து வழிந்-தோடி வரும் நீரோடைகள், ஆற்றின் குறுக்கே பாப்பநாயக்கன்-பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.அணையால், பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி, குமஸ்தம்பட்டி, மலையாளப்-பட்டி, பீமன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலங்கள் ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன. அணையில் நேற்று முன்தினம், 37.66 அடி உயரத்தில், 97.06 மில்-லியன் கன அடி மட்டுமே தண்ணீர் தேங்கி இருந்தது.இதையடுத்து, நேற்று முன்தினம், 149 மி.மீ., மழை பெய்ததைய-டுத்து, ஒரே நாளில் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, நேற்று, 50.52 அடி உயரத்தில், 175.60 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கி அணை நிரம்பியது.இதையடுத்து அணைக்கு நீர்வரத்து, 975 கனஅடி உள்ள நிலையில், அவை அனைத்தும் அணையின் மூன்று மதகின் வழியே வெளியேற்றப்பட்டு வருகிறது.ஒரே நாளில் அணை நிரம்பியது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.