| ADDED : ஜன 24, 2024 09:58 AM
சேலம்: சேலம் காவேரி மருத்துவமனை, ஒரு பெண்ணின் இரு கால்களின் தோல் சிதைவை சரி செய்து குணப்படுத்தியது.ஒரு நடுத்தர வயது பெண், விபத்துக்குள்ளாகி இடுப்புக்கு கீழே இரு கால்களிலும் தோல் சிதைந்த நிலையில், காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு 'டீக்ளோவிங் இன்சூரி' என்று குறிப்பிட்டனர். அவருக்கு வூண்ட் டெப்ரிடெமென்ட் என்ற சிதைந்த தோலை சரி செய்யும் முறையை பயன்படுத்தி சிகிச்சை செய்தனர்.ஒரு மாதத்தில், 10 அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு காயங்களை சரி செய்தனர். இதில் முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட திசுக்கள் நீக்கப்பட்டு, இரண்டு முறை வாக்யூம் அசிஸ்டெட் க்லோசர் என்னும் அரிய சிகிச்சை மூலம் அவரது சிதைந்த காயம், ஆரோக்கியமாக மாறியது. பின் அவரது உடலின் மற்ற பாகங்களில் இருந்து எடுக்கப்பட்ட தோலை பயன்படுத்தி, ஸ்கின் கிராப்டிங் செய்து அவரது காயங்கள் சரி செய்யப்பட்டது. தற்போது காயங்கள் அனைத்தும் குணமடைந்து, யார் உதவியும் இன்றி நிற்கவும் நடக்கவும் செய்கிறார்.இதுகுறித்து எலும்பியல் ஆலோசகர் மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அருண் கூறுகையில், ''ஒரு கால் தோல் இழப்பை சரி செய்வதே சவாலான விஷயம். ஒரே நேரத்தில் இரண்டு கால்களுக்கும் ஸ்கின் கிராப்டிங் செய்யப்பட்டதுடன், அவரது உடலின் மற்ற பாகங்களிலிருந்து எடுக்கப்பட்ட தோல் திசுக்களின் தரத்திலும் எந்த குறையும் இல்லாமல் சிகிச்சை செய்தோம். நல்லபடியாக அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சி,'' என்றார்.டாக்டர் அருண் மற்றும் குழுவினரை, சேலம் காவேரி மருத்துவமனை இயக்குனர் செல்வம் பாராட்டியுள்ளார்.