உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிடா வெட்டி டவுன் போலீசார் பூஜை?

கிடா வெட்டி டவுன் போலீசார் பூஜை?

சேலம், சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள், பல்வேறு கோவில்கள், பழைய பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலகம், கோட்டை பகுதி உள்ளிட்டவை உள்ளன.இதனால் டவுன் ஸ்டேஷனுக்கு புகார்கள் வந்தபடி, பரபரப்பாக காணப்படும். சில நாட்களுக்கு முன், ஒரு முதியவர், ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வந்தநிலையில் மயக்கமடைந்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது உயிரிழந்தார்.இச்சம்பவம் போலீசார் இடையே மன உளைச்சலை ஏற்படுத்தியது. மேலும் ஒரு மாதமாக டவுன் ஸ்டேஷனில் பிரச்னைகள் அதிகரித்துள்ளன.'கிடா' வெட்டி பூஜை செய்தால் பிரச்னை நீங்கும் என, போலீசார் கருதினர். அதேநேரம் ஸ்டேஷனில் செய்தால் பிரச்னை அதிகரிக்கும் என்பதால், மாரியம்மன் கோவிலில் வைத்து கிடா வெட்டி பலியிட்டு பூஜை செய்யப்பட்டதாகவும், அதன் ரத்தத்தை, ஸ்டேஷனில் தெளித்து, கறியை போலீசாருக்கு பகிர்ந்து அளித்ததாக தகவல் வெளியானது.போலீசார் கூறுகையில், 'போலீஸ் அதிகாரி, விடுமுறையில் அவரது குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார். அவ்வளவு தான்' என்றனர். இருப்பினும், உயர் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை