போலீஸ் பாதுகாப்புடன் திரையிடப்பட்ட கிங்டம்
ஆத்துார், 'கிங்டம்' படத்தில், இலங்கை தமிழர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி, நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம், சேலம் மாவட்டம் ஆத்துார் என்.எஸ்., தியேட்டரில், அப்படத்தை திரையிடக்கூடாது என, அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனால் மதியம், மாலை, இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து அப்படத்தை திரையிடக்கூடாது என, ஆத்துார் டவுன் போலீசில் மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று காலை, மதியம், போலீஸ் பாதுகாப்புடன், படம் திரையிடப்பட்டது.