மேலும் செய்திகள்
வி.சி., கட்சியினர் சாலைமறியல்
21-Dec-2024
ஓசூர்: ''மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவியில் இருந்து, பிரதமர் மோடி, நீக்க வேண்டும்,'' என, கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத் கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று, நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:சட்டம், ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலுள்ள மத்-திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை பற்றி தரக்கு-றைவாக பார்லிமென்டில் பேசினார். இது, 140 கோடி மக்கள் மனதை புண்படுத்தியது. பிரதமர் மோடி உடனடியாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக செய்ய வேண்டும். காங்., கட்சி, எந்த தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்டு, திருத்தி கொள்ளும். அது தான். காங்., கலாசாரம். பார்லிமென்-டிற்குள் செல்ல விடாமல், பா.ஜ., - எம்.பி.,க்கள் தடுத்தனர். ஆனால், பா.ஜ., - எம்.பி.,க்களை ராகுல் தாக்கவில்லை. அவர் கை கூட, அவர்கள் மீது படவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.பேட்டியின் போது, காங்., மாநில செயற்குழு உறுப்பினர் நீல-கண்டன், நிர்வாகி மைஜா அக்பர், மாநகராட்சி கவுன்சிலர் இந்தி-ராணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சின்னகுட்டப்பா உட்பட பலர் உடனிருந்தனர்.
21-Dec-2024