உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் மண் சரிவால் அபாயம்

நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் மண் சரிவால் அபாயம்

வீரபாண்டி: தொடர் மழையால், நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில், மண் சரிவு ஏற்பட்டு கற்கள் விழுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.சேலம்-கோவை நான்கு வழிச்சாலையில், சீரகாபாடியில் இருந்து அரியானுார் வரும் வழியில் அரியானுார் சந்திப்பு மேம்பாலம் சர்வீஸ் சாலையில் சிறு குன்று உள்ளது. இதன் மேல்பகுதியில், சில குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். சேலத்தில், கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையால், சர்வீஸ் சாலை விரிவாக்-கத்துக்காக பாறைகள் வெட்டிய பகுதியில், மண் சரிந்து மரத்தின் வேர்கள் வெளியே தெரிவதோடு, பாறைகளிலும் விரிசல்கள் ஏற்-பட்டுள்ளது. இதன் அருகிலேயே டாஸ்மாக் கடை உள்ளதால் மாலை, இரவில் விளக்குகள் இல்லாத இந்த சர்வீஸ் சாலையில் அமர்ந்து மது குடிப்பதும், சிலர் போதையில் விழுந்து கிடப்பதும் வாடிக்கையாக உள்ளது. மண் அரிப்பால் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலையில் குடிமகன்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண் சரிவு, பாறைகளில் விரிசல் விழுந்த பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை