உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலத்தில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது, வக்கீல் ஒருவர் கடந்த வாரம் காலனி வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து, சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், சேலம் குற்றவியல் வக்கீல் சங்க தலைவர் இமயவர்மன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை வக்கீல்கள் எழுப்பினர். இந்த விவகாரத்தில், ஜாதிய பிரிவினை வாதத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும், தமிழக அரசு இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் குற்றவியல் வக்கீல் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி