உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆக்கிரமிப்பு அகற்றாததால் துண்டு பிரசுரம் வினியோகம்

ஆக்கிரமிப்பு அகற்றாததால் துண்டு பிரசுரம் வினியோகம்

நாமக்கல், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து, 750 நாளாகியும் நடவடிக்கை இல்லாததால், சமூக ஆர்வலர் ஒருவர் என்.புதுப்பட்டி பகுதி மக்களிடம் துண்டுபிரசுரம் வினியோகம் செய்தார்.மோகனுார் தாலுகா, என்.புதுப்பட்டி ஊராட்சி, மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பழனிவேல். இவர், அங்குள்ள சந்து புறம்போக்கு நிலத்தை, சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதை மீட்டுத்தர கோரி, நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் 2023 ஜூலை 24ம் தேதி மனு அளித்தார். தொடர்ந்தது பல்வேறு குறைதீர் முகாம்களிலும், மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில் நேற்று, நாமக்கல்-திருச்சி சாலை, என்.புதுப்பட்டி பகுதி மக்களிடம், கோரிக்கை மனு அளித்து, 750 நாட்களாகியும் இதுவரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என அச்சிடப்பட்ட துண்டு பிரசுரத்தை வினியோகம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை