மேலும் செய்திகள்
வனச்சரகர் முற்றுகை; மர்ம விலங்கை பிடிக்க 'கெடு'
11-Sep-2024
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கொளத்தூர் ஒன்றியம் சின்னப்பட்டி ஊராட்சி அருகே வெள்ளக்கரட்டூர் கிராமம் மேட்டூர் அணைக்கரையோரம் உள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்த கிராமத்தில் சிறுத்தை ஒன்று உலாவி வருவதுடன் சில ஆடுகளை கடித்து கொல்கிறது. நேற்று முன்தினம் விவசாயி சுரேஷ் என்பவரின் ஆட்டை கடித்து கொன்றது. அதனை தொடர்ந்து விவசாயிகள், வனத்துறை அதிகாரிகளிடம் சென்று சிறுத்தையை விரட்ட வேண்டும் என வலியுறுத்தி வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நேற்று (செப்.,10) கூண்டு வைத்தனர். இன்று (செப்.,11) அதிகாலை சிறுத்தை, விவசாயி தேவராஜ் என்பவரின் காட்டில் புகுந்து அவரது பட்டியில் இருந்த 5 செம்மறி ஆடுகளை கடித்துக் கொன்றது. இது குறித்து வனத்துறை விசாரிக்கின்றனர்.
11-Sep-2024