உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குட்டியுடன் சிறுத்தை உலா: மக்கள் அதிர்ச்சி

குட்டியுடன் சிறுத்தை உலா: மக்கள் அதிர்ச்சி

கெங்கவல்லி:குட்டியுடன் வந்த சிறுத்தையின் காலடி தடங்கள், விவசாய தோட்டத்தில் பதிந்துள்ளதை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பச்சமலை ஊராட்சி, கீழ்பாலத்தாங்கரை மலைக்கிராமத்தில் கடந்த செப்., 25ல் ஒரு சிறுத்தை அங்குள்ள பட்டியில் இருந்த 4 கன்றுக்குட்டிகள், ஒரு பசு மாட்டை அடித்துக்கொன்றது.கடந்த 1ல் கன்றுக்குட்டியை கவ்வியபோது மக்கள் பார்த்து விரட்டினர். இதனால் வனத்துறையினர் நவீன கேமராவை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று முன்தினம் பச்சமலை ஊராட்சி எடப்பாடி மலைக்கிராம அடிவார பகுதியில் வந்த சிறுத்தை, விவசாயி ஏழுமலை தோட்டத்தில் புகுந்தது. அப்போது நாய் குரைப்பது சத்தம் கேட்டு வந்த ஏழுமலை உள்ளிட்ட சிலர், சிறுத்தையை பார்த்து விரட்டியுள்ளனர்.இந்நிலையில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து கணேசபுரத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் சிறுத்தை வந்து சென்றுள்ளது. அங்குள்ள காலடி தடத்தை பார்த்தபோது, இரு காலடி தடம் இருந்ததை கண்டறிந்தனர். இதனால் குட்டியுடன் சிறுத்தை உலா வருவதாக தெரிந்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆத்துார் கோட்ட வனத்துறையினர் குழு அமைத்து சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி