உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளியில் நுாலகம் திறப்பு

பள்ளியில் நுாலகம் திறப்பு

ஆத்துார், ஜன. 4-ஆத்துார், ராணிப்பேட்டை சாலையில் உள்ள அரசு உதவி பெறும் புனித மரியாள் ஆர்.சி., நடுநிலைப்பள்ளியில் புதிதாக நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்துள்ளனர். நேற்று, போதி நுாலக திறப்பு விழா நடந்தது.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் நகராட்சி தலைவி நிர்மலாபபிதா தலைமை வகித்து திறந்து வைத்தார். நகராட்சி முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியம், பாதிரியார் அருளப்பன், தி.மு.க.,வினர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி